வால்பாறையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நெகிழி விழிப்புணர்வு பேரணி

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் தேசதந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை பகுதியைத் தூய்மையான பகுதியாக வைத்திருக்க வலியுறுத்தி நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் தேசதந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை பகுதியைத் தூய்மையான பகுதியாக வைத்திருக்க வலியுறுத்தி நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் புறப்பட்ட இந்த பேரணியை வால்பாறை நகராட்சி ஆணையர் சரவணபாபு மற்றும் மேற்பார்வையாளர் சிவகுமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மரம் நடுவோம், இயற்கையை பாதுகாப்போம். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்போம் என்ற பதாகைகளைக் கையில் ஏந்தியபடியும் கோஷமிட்டபடி வந்தனர். 

விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரியில் புறப்பட்டு காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், காவல்நிலையம் வழியாக கல்லூரி வந்து முடிவுற்றது, ஊர்வலத்தில் வால்பாறை அரசு கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், தேசீய மாணவர் படை பசுமை பாதுகாப்புப் படை, மற்றும் நகராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...