புதிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது

கோவை : புதிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் போலீசார் கைது செய்தனர்

கோவை : புதிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் போலீசார் கைது செய்தனர்

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை தற்போது அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக எப்படியும் தேர்ச்சி பெறலாம் என்பதால் மாணவர்கள், படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதில்லை என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறி வந்தது.

அதற்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.

மேலும், மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.



இந்த புதிய கல்வி கொள்கையை எதிர்த்து திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 5ம் வகுப்பு 8ம் தேர்வு திட்டத்தை உடனடியாக நிரந்தரமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி பேசுகையில், குல கல்வியை கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு செயல் படுவதாகவும் இதனை உடனடியாக திரும்ப பெறாவிட்டால் அனைவரையும் ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...