கோவை : கோவை சரவணம்பட்டி அருகே மதுபோதையில் சொகுசு காரை இயக்கி வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தியதில் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களின் மீது வாகன சோதனையில் அக்கறை செலுத்தும் போலீசார், கார்களின் மீதோ பேருந்து அல்லது லாரியின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை.
இதனால் மதுபோதையில் கார், பேருந்து ஆகியவற்றை ஓட்டி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ப்ரோசோன் மால் அருகே சதீஸ் மற்றும் அனுசியா தம்பதியினர் காரில் அதிவேகமாக வந்துள்ளனர்.

மதுபோதையில் வாகனத்தை இயக்கி வந்த சதீஷ், கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறத்தில் வாகனத்தை இயக்கி வந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது மோதினார்.
இதனைத்தொடர்ந்து ராமகிருஸ்னாபுரம் -சரவணம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் அதிவேகமாக மோதினார். இதில் விபத்துக்குள்ளான மூன்றுபேரும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்த சதீஷை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.