கோவை : கோவையில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் பேருந்துகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடப்போவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 938 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் எழுந்தது.
இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த மலைச்சாமி என்பவரை கைது செய்தனர்.
இப்படியிருக்க, பேருந்துகளில் நூதன முறையில் கொள்ளையடிக்கும் வட மாநில கும்பல் கோவைக்குள் திட்டமிட்டு வந்துள்ளதாக மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதேபோல இவர்கள் கோவை -பெங்களூர், கோவை-சென்னை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடபோவதாகவும் தகவல் கிடைத்ததை அடுத்து மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் குற்றப் பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை நேற்று கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜினூர் மாவட்டத்தை சேர்ந்த சகில் அகமது(41), ரியா ஹுயூசைன் (46) என தெரியவந்தது.
அதேபோல் இவர்கள் பேருந்துகளில் நூதன முறையில் நகை மற்றும் பணங்களை கொள்ளை அடித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜினூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேருந்து கொள்ளைகளில் அதிக அளவில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.