கோவை : கோவை பீளமேடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அமமுக கட்சியை சேர்ந்த 60 பேர் மீது பீளமேடு போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை சோமனூர் அருகே உள்ள கணியூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) கோவை மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை வகித்தார்.
அதேபோல, இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் தினகரன் காளப்பட்டி சாலையில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரையின் வீட்டிற்கு வருகை தந்தார்.
இந்நிலையில், டிடிவி தினகரனை காண ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல அக்கட்சியின் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் ஓட்டியதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அமமுகவைச் சேர்ந்த 60 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.