நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது வசதிக்கேற்ப, வங்கி பணி நேரங்களில் செயல்பட்டு வந்த நிலையில், ஒருங்கிணைந்த பணி நேரமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் சமீபத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், நிதிச்சேவை துறை வங்கிகள் இயங்கும் நேரத்தையும் தற்போது அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக்கி உள்ளது.
இன்று அமலாகியுள்ள புதிய நேர முறையின் அடிப்படையில், காலை 10 மணிக்கு தொடங்கும் வங்கிகள் சேவை, மாலை 4.00 மணியுடன் முடிவடைகிறது. பிற்பகல், 2.00 மணி முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
எனினும், மிசோரம், நாகாலாந்து, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுவான நேர முறையில் மாற்றம் இருக்கிறது. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் நாட்டின் மற்ற பகுதிகளை விட முன்னரே சூரியன் உதயமாகும் என்பதால், மிசோரம், நாகாலாந்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம், அந்தமான், டையு-டாமன், தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் பொதுவான நேரம் நிர்ணயிக்கப்படவில்லை.