கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள மகாஜன அரசுப்பள்ளியில் 1973ல் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது நண்பர்களைப் பார்த்து ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 1919ம் ஆண்டு முதல் அரசு உதவிபெறும் மகாஜன மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு இருந்து எண்ணற்ற மாணவர்களை உருவாக்கி வரும் இந்த பள்ளியில், கடந்த 1973- 74 ஆண்டுகளில் இங்கு கல்வி பயின்ற, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகப் படித்த மாணவ மாணவிகள் என்று ஒன்றிணைந்து சந்தித்து தங்களது பள்ளி கால மலரும் நிகழ்ச்சிகளைப் பேசி நெகிழ்ந்தனர். மேலும், ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கண்களில் கண்ணீர் தழும்ப தங்கள் அன்பினை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, தங்களுக்குக் கல்வி போதித்து சிறந்த மனிதர்களாக உருவாக்கி ஆசானாகிய ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும், தற்போது இதே பள்ளியில் கல்வி பயிலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவனுக்கு உதவித்தொகையும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.