கோவை : பிரதமர் மோடி தமிழ் மீது அளவில்லா காதல் கொண்டவர் என்றும் மோடி தமிழைத் தொட்டுவிட்டதால் அதை வைத்து அரசியல் செய்தவர்கள் இனி கெட்டு போய்விடுவோம் என பயந்துள்ளதாக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.

கோவை பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி காந்தியின் கொள்கையை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்த உள்ளதாகவும், கட்சி, அரசியல் சார்பற்ற ஒத்த பாதை யாத்திரையில் கட்சியின் சின்னமோ, கொடியோ இருக்காது என தெரிவித்தார். காந்தியின் கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலான இந்த யாத்திரையில் நாள் ஒன்றிக்கு 5 முதல் 15 கிலோமீட்டர் நடக்க உள்ளதாகவும், ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் 15 நாட்கள் இந்த யாத்திரை நடத்தப்படும் எனக் கூறினார்.
ஐ.நாவில் தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் இருக்கும் கட்சிகளை விட தமிழின் புகழை பிரதமர் பாடுவதாகவும் கூறினார். தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்து ஓட்டு வாங்க முயற்சி செய்வதாகவும் ஆனால் தமிழை இதயத்தில் வைத்து தனது செயலில் தமிழை உயர்த்தி காட்டிய ஒரே பிரதமர், மோடி என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ் மீது அளவில்லா காதல் கொண்டவர் மோடி என்றும் மோடி தமிழைத் தொட்டுவிட்டதால் அதை வைத்து அரசியல் செய்தவர்கள் இனி கெட்டு போய்விடுவோம் என பயந்துள்ளதாகவும் இதனால், பிரதமர் தமிழ் பெருமையை பேசுவதை விமர்சிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.