கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், நெல் வயல்களில் ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இந்த விளக்கத்தின் போது, பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ந. குமார் அவர்கள் கூறியதாவது
“வேளாண்மையில் திறம்பட்ட இடுபொருள் மேலாண்மை மற்றும் ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க தமிழக விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் ஆளில்லா விமானம் மூலம் மருந்துகள் தெளிப்பதற்கான தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி முயற்சிகளில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது”. இயற்கைவள மேலாண்மை இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் தொலையுணர்வு மற்றும் புவிசார் தகவலியல் துறை ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளின் உதவியுடன் பயிர், மண் மற்றும் பேரிடர்கள் தொடர்பான இடஞ்சார்ந்த தகவல்களை தமிழக அரசிற்கு வழங்கி வருகிறது. மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் கடந்த ஆண்டு கஜா புயலினால் தென்னந்தோப்புகளில் ஏற்பட்ட சேதங்களை துல்லியமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்தது.

பொதுவாக ட்ரான்களில் ஆளில்லா விமானம் மற்றும் காப்டர் என இரண்டு வகைகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமானங்கள் ஆராய்ச்சி வயல்களை கண்காணிக்கவும், பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை மதிப்பீடு செய்யவும் பயன்படுகிறது. ஹெக்சாகாப்டர் மற்றும் ஆக்டாகாப்டர் 5 முதல் 50 லிட்டர் வரை தெளிக்கும் திரவம் எடுத்துச் செல்ல வல்லவை.
மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தோட்டப் பயிர்களுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை திறம்படத் தெளிக்க முடியும். இந்த தொழில்நுட்பம் குறைந்த அளவு நீரைக்கொண்டு 5 நிமிடத்தில் 1 ஹெக்டர் பரப்பளவிற்கு விரைவாக மருந்துகளை தெளிக்க வல்லது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆராய்ச்சி நோக்கமானது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 1 ஹெக்டருக்கு தெளிக்க வேண்டிய மருந்தின் அளவு, அடர்த்தி, துளியளவு மற்றும் பலபலனைத் தரப்படுத்துவதாகும். மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆளில்லா விமானத்தின் வேகம், உயரம், தெளிக்கும் வழிமுறை ஆகியவற்றை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உடன் இணைந்து மேம்படுத்த உள்ளனர்.

இச்செயல்முறை விளக்கமானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர். ந. குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநரகத்தின் இயக்குனர் முனைவர். K. S. சுப்ரமணியம் அவர்கள் ஆளில்லா விமானத்தின் மூலம் மருந்து தெளிக்கும் ஆராய்ச்சியின் நோக்கம் மற்றும் சிறப்பம்சங்களை விளக்கினார். இயற்கைவள மேலாண்மை இயக்குநரகம் தமிழகத்தின் நுண்ணூட்டச்சத்து குறைபாடுள்ள பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் நுண்ணூட்ட மருந்துகளை தெளிப்பதில் கவனம் செலுத்தும் என்று அதன் இயக்குனர் முனைவர். R. சாந்தி கூறினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொலையுணர்வு மற்றும் புவிசார் தகவலியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் செ. பழனிவேலன் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் MIT ஆராய்ச்சிக்குழு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்கும் செயல் விளக்கத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் முன்னிலையில் செய்து காட்டினார்.