முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் முறையான குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் முறையான குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியான பவானி ஆறு ஓடியும் முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. நகராட்சி பகுதியின் பல பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், பாதாள சாக்கடை திட்டம் காரணமாக நகராட்சியின் 33 வார்டுகளிலும் சாலைகளின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு முறையாக சாலையை செப்பனிடாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் கண்டுகொள்ளாததால், நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டினை கண்டித்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தி.மு.க கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர் ராமசந்திரன் தலைமையில் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நகராட்சியின் நிர்வாக குறைபாட்டால், பொதுமக்கள் தண்ணீர் கூட இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் கண்டனங்களை எழுப்பினர்.

மேலும், முறையாகக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தியும் பாதாள சாக்கடை திட்டத்தில் சேதமடைந்த சாலைகளை விரைந்து செப்பனிடவும் நகரின் பல பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தவும் வலிறுத்தபட்டது. இனியும் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கழுதைகளுடன் வந்து நகராட்சியில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...