கோவை : கோவை குண்டு வெடிப்பு வழக்கில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை : கோவை குண்டு வெடிப்பு வழக்கில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு வழக்கில் 168 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் பலர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 16 பேர் இன்னும் கோவை மத்திய சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அதேபோல, இந்த குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மேலும், மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக், அயூப் என்ற அஷ்ரப் அலி ஆகியோரும் கைது செய்யப்படவில்லை.
ஆகவே மேற்கண்ட நான்கு பேரும் காவல்துறையினர் பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில், மேற்கண்ட நான்கு பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

044 28512510
044 28513500
9498174100
9498169169
9498106909
9443017809
9498146092
மேற்கண்ட 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால், ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் தகவல் அளிப்பவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும். தகவல் அளிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளின் எண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.