கோவை : மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான என்.சி.சி கூட்டுப்பயிற்சி முகாம் பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் மாணவர்களுக்கு துப்பாக்கி கையாளுதல் உட்பட பல்வேறு பயிற்சிகள் ராணுவ வீரர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையில் உள்ள எஸ்.வி.ஜீ.வி பள்ளி மைதானத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான என்.சி.சி எனப்படும் மாணவர் படைக்குப் பயிற்சிக்கு அளிக்கும் கூட்டுப்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து 15 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் என மொத்தம் 500 பேர் பங்கேற்றுள்ளனர்.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், மாணவர்களுக்கு வெலிங்டன் ராணுவ வீரர்களை கொண்டு களத்தில் செயல்படும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, துப்பாக்கி சுடுதல், தற்காலிக கூடாரம் அமைத்தல், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, மலையேறும் பயிற்சி, மேப்ரீடிங் என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்ட 31வது பிரிவு என்.சி.சி அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டுப் பயிற்சி முகாமில் மாணவர்களின் பயிற்சி குறித்து கோவை மாவட்ட என்.சி.சி குரூப் கமாண்டர் எஸ்.சி.எஸ் நாயுடு நேரில் பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், ஒவ்வொரு மாணவரும் எதிர்கால ராணுவ வீரர் என்றும் தங்கள் ஒவ்வொரும் தாய் நாட்டினை நேசிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், இந்த பயிற்சியின் மூலம் அளிக்கப்படும் சான்றிதழ்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என குறிப்பிட்டார். நீலகிரி மாவட்ட என்.சி.சி தலைமை அதிகாரி லெப்டினல் தேப் மற்றும் ராணுவ வீரர்கள் இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.