என்கவுண்டருக்கு பயந்து தலைமறைவாக இருந்த சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கோவையில் கைது

கோவை : சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி என்கவுண்டருக்குப் பயந்து கோவையில் தலைமறைவாக இருந்த நிலையில் சிங்காநல்லூர் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கோவை : சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி என்கவுண்டருக்குப் பயந்து கோவையில் தலைமறைவாக இருந்த நிலையில் சிங்காநல்லூர் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (34). இவர் மீது சென்னை மாநகர பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 36 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தொடர்ந்து தப்பித்து சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்துகொண்டிருந்தார்.

இந்த நிலையில், ரவுடி ராதாகிருஷ்ணனை என்கவுண்டர் செய்ய சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த அவர் சென்னையிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்துள்ளார்.

இதையடுத்து, சென்னை மாநகர போலீசார் தமிழகம் முழுவதும் தனிப்படை அமைத்து ராதாகிருஷ்ணனை தீவிரமாக தேடி வந்தனர். அதேபோல, தனிப்படை குழுவினர் சிலர், அவர் எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்தும் ரகசியமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற, கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, சென்னை மாநகர போலீசார் கோவை மாநகர காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மாநகர காவல் துறையின் உத்தரவின்படி, சிங்காநல்லூர் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரவுடி ராதா கிருஷ்ணனை நேற்று இரவு கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் சிக்கிய தகவல் குறித்து சென்னை அரும்பாக்கம் போலீசாருக்கு சிங்காநல்லூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சென்னை மாநகர போலீசார் ராதாகிருஷ்ணனை அழைத்துச்செல்ல கோவை வந்து கொண்டிருக்கின்றனர்.

இன்னும் சற்று நேரத்தில் அவர் சட்ட வரைமுறைக்கு உட்பட்டு சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நேற்று கோவையில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர் எந்நேரத்திலும் என்கவுண்டர் செய்யப்படுவார் என வெளியான தகவலையடுத்து கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...