கோவை : கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான வரும் 2ம் தேதி காலை 11.00மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்படி கூட்டத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்தல், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைநீரினை சேமிக்கும் பொருட்டு, ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகள், வணிகம், தொழில் நிறுவன கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை தடுக்க போதுமான சுகாதார நடவடிக்கைகள், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நர் மேலாண்மை இயக்கம் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், மக்கள் திட்டமிடுதல் இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், ஊட்டச்சத்து இயக்கம், முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டி மானியம், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமாயோஜனா, பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி பீமாயோஜனா, அடல்பென்ஷன் யோஜனா, அம்மா இரு சக்கர வாகனத்திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
எனவே கிராம ஊராட்சிப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.