கோவை : கோவையில் விபத்தில்லா சாலைகளை உருவாக்கும் பொருட்டு போக்குவரத்து சந்திப்புகளில் மாணவர்கள் சாலை விதிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை : கோவையில் விபத்தில்லா சாலைகளை உருவாக்கும் பொருட்டு போக்குவரத்து சந்திப்புகளில் மாணவர்கள் சாலை விதிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.
உயிர் அமைப்பு சார்பில் 16 கல்லூரிகளில் உயிர் கிளப்புகள் எனப்படும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள், ஹெல்மெட் அணிந்து வருவதையும், கார்களில் சீட் பெல்ட் அணிந்து வருவதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து சந்திப்புகளில் பதாகைகளை தாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று கோவையில் துவங்கப்பட்டது.

கோவை அண்ணா சிலை சந்திப்பில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர், சுமித் சரண் மற்றும் உயிர் அமைப்பின் மேலாண்மை அறங்காவலர் மருத்துவர் எஸ். ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது சாலை விதிகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சந்திப்புகளில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் சீட்பெல்ட், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் இனிப்புகளையும் வழங்கினர்.

இது குறித்து பேசிய மருத்துவர் ராஜசேகரன், இந்த செயல்பாடுகள் வாகன ஓட்டிகளிடம் பெரும் மாற்றத்தை உருவாக்கி உள்ளதாகவும் விபத்தில்லா சாலைகளை உருவாக்க மாணவர்களுடன் இணைந்த இந்த முயற்சி நிச்சயம் பலனளிக்கும் எனவும் கூறினார்.