இளம்பெண் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் ; உறவினர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை : கோவையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம் பெண்ணின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : கோவையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம் பெண்ணின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை அடுத்த சூலூர் பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகளான சோபனா(25) அப்பகுதியில் செயல்பட்டு வந்த லலிதா ஸ்ரீ என்ற அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி பணியிடத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் சோபனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.



இது தொடர்பாக சோபனாவின் உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு போயர் இன ஒற்றுமை சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அழகு நிலைய உரிமையாளரான லலிதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் சோபனாவை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு மறுத்ததால் அவர்கள் சோபனாவை கொலை செய்து தற்கொலையாக மாற்றியிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் எனவே அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் தங்களது மனு வலியுறுத்தியிருந்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தங்களது கைகளில் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...