இடைத்தேர்தலில் செலவு செய்ய காங்கிரஸ் கட்சியில் ஒரு பைசா கூட இல்லை : கே.எஸ்.அழகிரி

கோவை : கோடிக்கணக்கான ரூபாய் பணம் புரளும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கோவை : கோடிக்கணக்கான ரூபாய் பணம் புரளும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டது, இந்தி மொழியை திணிப்பிற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் மீட்டெடுப்பதில் தோல்வியடைந்த பாஜகவை கண்டித்து அக்டோபர் மாத இறுதியில் போராட்டம் நடத்தப்படும் எனவும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்,நசிந்து வரும் திருப்பூர் ஜவுளி தொழிலை பாதுகாக்க உற்பத்தியாளர்கள் பெற்ற கடனை வங்கிகள் மறுசீரமைப்பு செய்து தர வேண்டும், திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஆயத்த ஆடை உற்பத்திக்கென தனிவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்தியா ஒரு நாடு கிடையாது எனவும் பல்வேறு மொழி, கலாச்சாரம்,கொண்ட நாடுகளின் தொகுப்பு எனவும் தெரிவித்தார். மேலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பது சாத்தியமாகாது எனவும் இன்று வரைக்கும் இந்தியா ஒரே நாடாக இருக்க காரணம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் தான் எனவும் அவர் கூறினார்.



மேலும், காஷ்மீர் இந்தியாவோடு இணைய காரணம் நேரு கொடுத்த வாக்குறுதி தான் எனவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படாததற்கு நேரு காரணமல்ல மவுண்ட்பேட்டன் பிரபு தான் காரணம் எனவும் அவர் கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார அறிவற்றவர் எனவும் அமித்ஷா மோடியின் அடியாள் எனவும் கூறிய அவர், காங்கிரசார் சரியாக செயல்படாததால் தான் பாஜக ஆட்சியில் உள்ளதாக தெரிவித்தார்.

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய காங்கிரசார் கடுமையாக பாடுபட வேண்டும் எனவும், வாக்குச்சாவடியை கைப்பற்றும் சக்தி இல்லையென்றாலும் காப்பாற்றும் சக்தி காங்கிரசாருக்கு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்குக் கோடிக்கணக்கான பணம் புரளும் எனவும் காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை என்று கூறிய அழகிரி, காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக உழைத்து இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...