நீலகிரி : கோத்தகிரி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, குடிசை வீட்டின் மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

உதகை சுற்று வட்டார பகுதிகளில் அதிக மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில், கோத்தகிரி மெட்டுக்கல் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி மகன் நிதிஷ்குமார் மற்றும் மகாலிங்கம் மகன் சக்திவேல் (21) ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அருகில் உள்ள குடிசை வீட்டில் காவலுக்காக நள்ளிரவில் தங்கியுள்ளனர். அப்போது, அதிக காற்று வீசியதால் பெரிய மரம் ஒன்று குடிசை வீட்டின் மீது விழுந்துள்ளது.
இதில், நிதிஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனைத் தொடர்ந்து சக்திவேலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து காேத்தகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.