நீலகிரி : நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் பகுதியில் அடிப்படைத் தேவைகளை செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த 200க்கும் மேற்பட்டோர், ஆட்சியரை நேரில் சந்திக்க வேண்டும் என தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் பகுதியில் அடிப்படைத் தேவைகளை செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, தங்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தே ஆக வேண்டும் என தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தூதூர் மட்டம் மகாலிங்க காலணியில் குடிநீர், கழிப்பிட வசதி, மயான பூமி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைத்துத் தர மாவட்ட ஆட்சியரை சந்திக்க கை குழந்தைகளுடன் வந்த பொதுமக்கள், திடீரென கை குழந்தைகளை தரையில் படுக்க வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்டவற்றை ஒப்படைக்க முயன்றனர். இதனைத் தடுக்க முயன்ற காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் இன்று அப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியதையடுத்து, 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.