கோவை : இந்திய விமான தளத்தின் 87வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இராணுவ விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய விமானப்படை குறித்தும், இதில் பயன்படுத்தும் ஆயுதங்கள் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள சிறப்பு சாகச நிகழ்வுகளானது நடத்தி காட்டப்பட்டது.

இந்திய விமானப்படையின் 87ம் ஆண்டு விழா வருகின்ற அக்டோபர் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி, விமானப்படை சார்பில் இந்தியா முழுவதும் உள்ள விமானப்படை தளங்களில் விமான கண்காட்சி மற்றும் விமானப்படையில் பயன்படுத்தும் பாராசூட்கள், துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, போபாலில் விமான சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமானங்களின் கண்காட்சியும், விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. இராணுவ விமானங்கள் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசங்களை செய்து காட்டின.
இதில் தேஜஸ், ஏ என் 32, எம்.ஐ 17, சாரங் மார்க் 1 உள்பட பல்வேறு இராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், இதில் விமானத்தில் பயன்படுத்தப்படும் நவீன ரக இயந்திர துப்பாக்கிகள், ஏவுகணைகள், துப்பாக்கி குண்டுகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
சூலூர் விமான படைதளம் அருகில் உள்ள பள்ளி குழந்தைகள், விமான படைதளத்திற்கு அழைத்து வரப்பட்டு விமானப்படையின் செயல்பாடுகள் மற்றும் விமானங்களின் வகைகள், அதன் தாக்குதல் திறன் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய விமானப்படை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.