கோவை : கோவை இடையர்பாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த நபரிடமிருந்து வழிப்பறி கொள்ளையன் செல்போன் பறித்து சென்ற சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் தைரியமாக கொள்ளையனை துரத்திப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு அருந்தி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள், அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.
இதையடுத்து, அரவிந்த் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவரின் உதவியுடன் செல்போனை பறித்து சென்ற கொள்ளையர்களை துரத்திச் சென்றார்.
இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கொள்ளையர்களை, இடையர்பாளையம் ஜங்ஷன் அருகே அரவிந்தும் அப்பகுதி மக்களும் சுற்றி வளைத்தனர்.
அப்போது, சுதாரித்துக்கொண்ட ஒரு கொள்ளையன் பொதுமக்களிடம் இருந்து தப்பித்து சென்று விட்டார்.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கொள்ளையன் பொதுமக்களால் சிறைபிடிக்கப்படவே, ஆத்திரமடைந்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் தகவலறிந்து வந்த துடியலூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து கொள்ளையனை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரசணையில், இந்த வழிப்பறி கொள்ளையன் உக்கடம் ஜி எம் நகர் பகுதியை சேர்ந்தவர் சனோஃப் என்பதும் ஏற்கனவே மூன்று இடங்களில் செல்போனை திருடிவிட்டு நான்காவது இடத்தில் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார், சனோஃப்பை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த கொள்ளையரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.