கோவை : கோவையில் வாட்ஸ்அப் குழு மூலம் எந்தெந்த பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை இளைஞர் குழுவினர் வாய்ஸ் மெசேஜில் பகிர்ந்து வருகின்றனர்.

சமீப காலங்களாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி அதிகரித்து வரும் வாகனங்களினால் போக்குவரத்து நெரிசலும், அதேசமயத்தில் போக்குவரத்து விதி மீறல்களும் பெருகி வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து விதி மீறலை கட்டுப்படுத்த, போலீசார் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல, முந்தைய காலங்களில் சாலைப் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், தற்போது நகரின் வீதி சாலைகளிலும் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
கட்டாய ஹெல்மெட் சட்டம் :
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் 2007-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த சட்டமானது தமிழக அரசின் மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்தே போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் ஹெல்மெட் அணியாதவர்கள் சாலைகளில் எளிதாக சுற்றித் திரிந்து வந்தனர்.
இப்படியிருக்க, கடந்த 2015-ம் சென்னை உயர்நீதிமன்றம் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து போலீஸாரின் கெடுபிடி அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியது.
இருந்தாலும் வாட்ஸ்அப் குழு உதவியுடன் சில இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமலும் மது போதையிலும் வாகனங்களை ஓட்டிச் செல்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
கோவை மாநகரில் மொத்தம் 15 காவல் நிலையங்கள் உள்ளது. இத்துடன் மேற்கு,கிழக்கு என இரண்டு போக்குவரத்து காவல் எல்லையும் உள்ளது. இப்படி மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும், முக்கிய சாலைகளிலும் சிறிய சாலைகளிலும் திடீரென வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
இதனால் ஹெல்மெட் அணியாதவர்களும், முறையான ஆவணங்கள் இல்லாதவர்களும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களும் சிக்கிக் கொள்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் என்ன சட்டங்கள் போட்டாலும், சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்துச் செல்லும் கூட்டங்களும் உள்ளது.
இவ்வாறு காவல்துறையின் கண்களில் சிக்காமல் தப்பித்துச் செல்லும் குழுக்கள் இக் காலத்திற்கு ஏற்றார் போல நவீனமாய் தப்பித்துச் செல்கின்றனர்.
போலீஸ் எச்சரிக்கை வாட்ஸ்அப் குழு :
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இளைஞர்கள் வாட்ஸ்அப் குழுக்களை ஆரம்பித்துள்ளனர். இந்த வாட்ஸப் குழுவின் நோக்கம் போலீசாரிடம் இருந்து எப்படி தப்பித்துச் செல்வது என்பதுதான்.
சாலை விதிகளை மதிக்க அச்சப்படும் இளைஞர்கள் சிலர் போலீஸ் எச்சரிக்கை, ஓவர் ஓவர், வயர்லெஸ் என பல்வேறு பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து போலீசார் எங்கெங்கு நிற்கின்றனர் என குழுவில் வாய்ஸ் மெசேஜ் ஆக பதிவு இடுகின்றனர். இந்தப் பதிவை வைத்து சுதாரித்துக் கொள்ளும் இளைஞர்கள் மாற்றுப்பாதைகளில் செல்கின்றனர்
இதுகுறித்து இளைஞர் ஒருவர் கூறும்போது :
நான் ஒரு வருடமாக குறிப்பிட்ட இந்த வாட்ஸப் குழுவில் உள்ளேன்.
நாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு போலீசாரிடம் போய் தண்டம் கட்டி செல்ல முடியாது.
ஆகவே குழுவில் உள்ள நண்பர்கள் அனைவரின் உதவியுடன் நாங்கள் போலீசாரிடம் சிக்காமல் தப்பி செல்கிறோம்.
இதில் குறிப்பாக நான் சாலையில் குறிப்பிட்ட பகுதியில் பயணிக்கிறேன் என்றால் அந்தப் பகுதியில் போலீசார் நின்று கொண்டிருந்தால் குழுவில் வாய்ஸ் மெசேஜ் மூலம் எச்சரிக்கை கொடுத்து விடுவேன்.
அதேபோல, அடுத்தடுத்து மற்ற நண்பர்கள் மூலம் வரும் தகவலை வைத்து போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் சென்று வந்து விடுவேன் என தெரிவித்தார்.
எளிமையாக தொடர்புபடுத்திக் கொண்டு விரைவாக பணி செய்யவும் உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் உருவாக்கப்பட்ட இந்த வாட்ஸ்அப் தற்போது தவறான முன்னுதாரணத்திற்கும் வழி வகுத்து வருகிறது.
அதேபோல, இதுபோன்று தொடங்கப்படும் வாட்ஸ் அப் குழுக்கள் சட்டவிரோத பணிகளுக்கும் தூண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது :
சாலை விதிகளை மதிக்காத இளைஞர்கள் மாற்றுப் பாதையில் தப்பிச் செல்ல வாட்ஸ்அப் குழுக்களை அமைத்துள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. ஆனால் மாநகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் கண்களில் இருந்து இவர்கள் தப்பித்துச் செல்ல முடியாது.
ஒரு வழியில் தப்பித்தாலும் மறு வழியில் மாட்டிக் கொண்டு தான் வருகின்றனர். இது தவறான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற குழுக்களை அமைப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.