வால்பாறையில் மாட்டுத்தொழுவமாக மாறிய கல்லூரி கலையரங்கம் ; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை : வால்பாறையில் மாட்டுத்தொழுவமாக கல்லூரி கலையரங்கம் மாறியுள்ள நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை : வால்பாறையில் மாட்டுத்தொழுவமாக கல்லூரி கலையரங்கம் மாறியுள்ள நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது அரசு கலை அறிவியல் கல்லூரி. இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கல்லூரி வளாகத்தில் ரூ 25 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

சமீப காலமாக, கல்லூரி கலையரங்கம் மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது. முன்னதாக, இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக செயல்பட்டு வந்தபோது, அடிக்கடி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது, எவ்வித நிகழ்ச்சிகள் நடைபெறாமல் மாட்டு உரிமையாளர்களுக்கு சாதகமாக மாறி விட்டது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...