கோவை : கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மோசடி புகார் தொடர்பாக மனு அளிக்க வந்த பெண் தற்கொலைக்கு முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்த அன்னூர் ஆலங்குட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி வசந்தா. மகன் மற்றும் மகளுடன் இவர்கள் வசித்து வரும் நிலையில், முருகேசன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பணத்தேவை காரணமாக வசந்தா தனது நகைகளை அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் மூலமாக கடந்த 2017ம் ஆண்டு வங்கியில் அடமானம் வைக்க கொடுத்துள்ளார்.
17 சவரன் நகைகளை அடமானம் வைத்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெற்ற நிலையில், அதனை வசந்தா வட்டியும் முதலுமாக கொடுத்துவிட்ட பிறகு நகைகளை திரும்ப தருமாறு விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால், விஜயகுமார் நகைகளை தனது பெயரில் வங்கியில் அடமானம் வைத்துவிட்டு நகைகளை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், நகைகளை திரும்ப கேட்ட வசந்தா மீது அவதூறு தகவல்களை பரப்பியதோடு அவரது குடும்பத்தினரையும் தனது செல்வாக்கால் ஊரை விட்டு விலக்கி வைத்ததாக விஜயகுமார் மீது வசந்தா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனு அளிக்க வசந்தா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அப்போது, அவரது பையில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில், மண்ணெண்ணெயை அவர் மறைத்து வைத்திருந்ததை பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தற்கொலை முயற்சி யோசனையுடன் வந்த வசந்தாவை சாந்தப்படுத்திய காவலர்கள், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வாயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.