கோவை : அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர் மீது நடவடிக்கை கோரி முட்டி போட்டு ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஜெகதீசனார் என்பவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், தான் வசித்து வரும் பகுதியில் இமயம் ஸ்டார் விஷன் என்ற பெயரில் வெற்றிவேல் என்பவர் அரசு செட்டாப் பாக்ஸ் சேவை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும், நிர்மான கட்டணமாக ரூ.200 மட்டுமே வசூலிக்க வேண்டும், மாதம் கட்டணமாக 154 மட்டுமே வாங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில், செட்டாப் பாக்ஸ்களுக்கு 300 ரூபாயும், நிர்மான கட்டணமாக 180 ரூபாயும் மாதம் 180 ரூபாய் கட்டணமாகவும், வெற்றிவேல் வசூலித்து வருவதாக அம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் பல லட்சம் ரூபாயை வெற்றிவேல் மோசடி செய்வதாகவும் இது தொடர்பாக புகார் அளிக்க அரசு அறிவித்துள்ள எண்களுக்கு அழைத்தால் யாரும் எடுப்பதில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உரிய நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஜெகதீசனார் ஆட்சியர் அலுவலகத்தில் முட்டி போட்டு சென்று மனு அளித்தார்.