கோவை : கோவை மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கூட்டரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், 2000 படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.14.11 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி தொகையுடன் தாலிக்கு தங்கத்தை, வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்;
முதலமைச்சர் அவர்கள் அம்மா அவர்களின் வழியில் மகளிர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பொற்கால ஆட்சி நடத்தி வருகின்றார்கள். ஏழை குடும்பங்களுக்கு, விலையில்லா மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், விலையில்லா வெள்ளாடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டம், முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் திருமண நிதியுதவித் திட்டம், உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் கல்வி பயிலும் பெண்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், பொருளாதாரம் ஈட்டும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறினார்.
சமூக நலத்துறையின் மூலம் ஏழை எளிய மகளிர்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், ஈ.வே.ரா மணியம்மையார் விதவைகள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் திருமணத்திற்கு 8 கிராம் தங்கத்துடன் நிதியுதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அம்மா அவர்களால் 2011 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பின்படி, பெண்கள் அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்ற இலக்குடன் 17.05.2011க்கு பிறகு நடைபெறும் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழை குடும்பத்தைச் சார்ந்த பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000/- ம், மற்றும் 4 கிராம் தாலிக்கு தங்கமும் பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50,000/-ம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கும் சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற வரவேற்பு மற்றும் பெண்களின் முன்னேற்றம், கல்வி நிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் போன்ற காரணங்களால், கருத்தில் கொண்டு அம்மா அவர்களின் 2016 தேர்தல் அறிவிப்பின்படி முதல் ஐந்து கையெழுத்துகளில் ஒன்றாக 23.05.2016- க்கு பிறகு நடைபெறும் திருமணங்களுக்கு வழங்கப்படும் தங்க நாணம் 4- கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தப்படும் என்று மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்தார்கள். 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 4 கிராம தங்கத்துடன் கூடிய திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 27,563 பயனாளிகளுக்கு, ரூ.104.5/கோடி, 2016 முதல் 2019-ஆம் ஆண்டு வரை 7,௩௩௧ பயனாளிகளுக்கு, ரூ.46.12கோடி மதிப்பில் திருமண நிதியுதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இவ்விழாவில் 10ம் வகுப்பு பயின்ற பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக ரூ.25,000/- வீதம் 514 பயனாளிகளுக்கு ரூ.1.28கோடி மதிப்பில், பட்டம் மற்றும் பட்டயம் பயின்ற பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக ரூ.50,000/- வீதம் 1,486 பயனாளிகளுக்கு ரூ.7.43கோடி மதிப்பில் திருமண நிதியுதவித் தொகையும், 2000 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம், தங்கத்தின் மதிப்பீடு ரூ.5.39கோடி என மொத்தமாக ரூ.14.11கோடி மதிப்பிலான தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி தொகையாக தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஏழு ஆண்களில் திருமண நிதியுதவித் திட்டத்தின் மூலம் 36,894 பயனாளிகளுக்கு ரூ.164.08கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவரையும், நமது சமுதாயத்தின் அங்கமாக அங்கீகரித்து, அவர்கள் தங்களுடைய வாழ்வில் வளம் பெற கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த 65 திருநங்கையர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் சுயதொழில் துவங்க ரூ.9,00,000,- (ரூபாய் ஒன்பது இலட்சம் மட்டும்) வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இவ்விழாவில் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி. ஆர்.ஜி. அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.சி. ஆறுக்குட்டி, எட்டிமடை எ.சண்முகம், வி.பி.கந்தசாமி, கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) தனலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.