கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சரவணம்பட்டி காவல் எல்லையில் புதியதாக 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்கவிழா நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் இந்த விழாவை துவங்கி வைத்தார்.

கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை,கொள்ளை,வழிப்பறி, ஆள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும் மூன்றாம் கண் என சொல்லப்படுகிற கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.
இதில், ஆர்எஸ்புரத்தில் துவங்கி, பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, காட்டூர் காவல் எல்லை, போத்தனூர் காவல் எல்லை, சிங்காநல்லூர் காவல் எல்லை என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் சரவணம்பட்டி காவல் எல்லையில் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவினை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் சரவணம்பட்டி காவல் நிலைய பகுதியில் துவங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அவர் இந்த கண்காணிப்பு கேமரா வழங்கிய தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள், சமூக சேவகர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த கண்காணிப்பு கேமராக்கள், சரவணம்பட்டி காவல் எல்லையின் முக்கிய பகுதிகளான பெருமாள் கோவில் வீதி, ஸ்ரீராம் நகர், ராதா லேடீஸ் ஹாஸ்டல் பகுதி, சிவன் கோயில் பகுதி, கோவை சத்தி சாலை, உட்பட பல்வேறு பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு கேமரா அமைக்கும் நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், செல்வக்குமார், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல சரவணம்பட்டி காவல் எல்லையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்ட ஆய்வாளர் செல்வராஜ் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.