கோவை : கோவை மாவட்டம் குனியமுத்தூர், செல்வபுரம், தொண்டாமுத்தூர், பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இன்று நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் கலந்துகொண்டு 360 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்;
தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் அம்மா அவர்கள், பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி மகளிர் முன்னேற்றத்திற்கு ஏணியாக விளங்கினார். சமுதாயத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமான நல்வாழ்வு மிகவும் அவசியம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் முன்னோர்கள் கருத்தாகும். குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடியான திட்டம் தான் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம். மனிதவள மேம்பாட்டின் ஆணிவேராகவும், அடித்தளமாகவும் இருப்பவர்கள் பெண்களும், குழந்தைகளும். அவர்களது நலனைப் பேணிக் காப்பது மிகவும் அவசியமாகும் என்றார்.
இன்றைய குழந்தைகள் எதிர்கால சந்ததியினர். இவர்கள் இன்று ஆரோக்கியமாக இருந்தால்தான் நாளைய சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இரண்டு வயதை அடைவதற்கு முன் ஒரு குழந்தைக்கு ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக் குறைபாட்டைச் சரிசெய்வது எளிதில்லை. தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பெற்ற சிறப்புத்திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையிலும், எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்டதாகவும் விளங்கி வருவதாக கூறினார்.
அதனடிப்படையில், இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசையுடன் 5 வகையான கலவை சாதங்களும் கர்ப்ப காலங்களில் உணவு உண்ண வேண்டும் என்பதன் அடையாளமாக வழங்கப்படுகின்றது. இதை மனதில் கொண்டு கர்ப்பகால முன், பின் பராமரிப்பு, குழந்தைக்கு உணவூட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்றவை குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தவளைகாப்பு நடத்தப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தினை உருவாக்க வேண்டுமென வாழ்த்துவதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) தனலிங்கம், மாவட்ட திட்ட அலுவலர்( ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்) மீனாட்சி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.