சூயஸ் ஒப்பந்த விவகாரம்! குடிமகனுக்கு குடிநீர் கொடுப்பதை தவிர அரசின் வேலை என்ன? : சீமான் கேள்வி

கோவை : கோவை குடிநீர் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், என்னுடைய தண்ணீரை எடுத்துக் கொடுப்பதற்கு சூயஸ் நிறுவனத்திற்கு எதற்கு ஒப்பந்தம், நாட்டின் குடிமகனுக்கு குடிநீர் கொடுப்பதைத் தவிர அரசின் வேலை என்ன? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை : கோவை குடிநீர் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், என்னுடைய தண்ணீரை எடுத்துக் கொடுப்பதற்கு சூயஸ் நிறுவனத்திற்கு எதற்கு ஒப்பந்தம், நாட்டின் குடிமகனுக்கு குடிநீர் கொடுப்பதைத் தவிர அரசின் வேலை என்ன? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு உண்மையை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் இங்கு தாய் மொழியில் இருந்து தமிழர்கள் வெளியேறி விட்டனர். சிதைந்து, அழிந்து விட்டது தாய்மொழி என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. இவ்வளவு காலமாக இந்த மண்ணை ஆண்ட ஆட்சியாளர்கள் தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். தற்போது தமிழ்நாடு தேர்வாணையத்தின் தமிழை படிக்காதவர்கள் தேர்வு எழுதி கொள்ளலாம். வேண்டுமென்றால் தமிழைப் படித்துக் கொள்ளலாம். பொன்னார் கூறியது சரிதான் அதாவது கொஞ்சம் கூட ஒரு மொழி புரிதலோ, தமிழை மீட்டெடுக்க அக்கறையோ தமிழ் மீட்சிக்கு துளியும் கூட ஒரு அக்கறையோ கிடையாது என்றார்.

தமிழ்நாடு வேட்டைக்காடாக மாற்றப்பட்டுள்ளது... என்னுடைய தண்ணீரை எடுத்துக் கொடுப்பதற்கு சூயஸ் நிறுவனத்திற்கு எதற்கு ஒப்பந்தம், நாட்டின் குடிமகனுக்கு குடிநீர் கொடுப்பதைத் தவிர அரசின் வேலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

பல நாடுகளில் அடித்துத் துரத்தப்பட்ட சூயஸ் நிறுவனத்திற்கு இங்கே என்ன வேலை என கேள்வி எழுப்பிய அவர், மாற்று வழியில் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லுங்கள் என்று கூறுகிறோம் அதேபோலத்தான் கெயில் பைப்லைன் கொண்டு செல்ல வழிபடுகிறோம். அதேபோலத்தான் பூமிக்கு அடியில் உயர் மின்னழுத்த மின்சாரத்தை கொண்டு செல்ல கூறுகிறோம்.. பூமிக்குள் கம்பி மூலம் கொண்டு செல்வதால் ரூ.42,000 கோடி மீதமாகும். மக்கள் மீது அக்கறை உள்ள அரசு அதை சிந்திக்கும் என்றார்.

மேலும், இலங்கை தேர்தலில் மீண்டும் ராஜபக்சே போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு, எங்களைப் பொறுத்தவரை யார் வந்தாலும் எந்த பலனும் இல்லை. அதை ராஜபக்சே, சிறிசேனா என யார் வந்தும் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை.இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை, அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வராமல் எங்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று கூறினார்.

செல்லும் உயர் மின் கோபுரத்தின் அடியில் மின் விளக்குகள் வைத்தால் பல்புகள் எரிகின்றதே அதை நீங்கள் பார்க்கிறீர்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறையே கிடையாது. சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஹைட்ரோகார்பன் மீத்தேன் போன்றவற்றை எடுக்கின்றன. அதேபோல காய்கறி கழிவுகள் மலக் கழிவுகள் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்..

பிறகு ஏன் பூமித்தாயை அழிக்கிறீர்கள்.. பூமிக்கடியில் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று எடுத்து வரும்போது எப்படி எதிர்கால தலைமுறைகள் வாழும் இடமாக இந்த பூமி இருக்கும். கண்முன் எத்தியோப்பியா, சோமாலியா, நைஜீரியா போன்றவற்றை பார்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம்.. நாங்கள் பொழுதுபோக்குக்காக போராடுவதாக, ஆட்சியாளர்கள், மக்கள் நினைத்தால், அதற்காக போராடுவதில்லை என்றார்.

தேர்தலில் பணம் தான். திமுக, தேர்தல் ஆணையத்திடம் இடதுசாரிகளுக்கு 25 கோடி கொடுத்தேன் என்று கூறுகிறது. எதற்கு இந்த 25 கோடி, தேர்தல் ஆணையம் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 70 லட்சம் தான் என்று நிர்ணயித்துள்ளது. எதற்காக கொங்குநாடு கட்சிக்கு 15 கோடி கொடுத்தேன் என்று கூறுகிறது.. ஒரு கட்சிக்கு எத்தனை கோடிகள் பணம் விளையாட்டாக ஆகியுள்ளது.

தேர்தல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் புனித அமைப்பு கிடையாது.. முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றி நிறுத்தப்பட்டுவிட்டது..இங்கு பணம் தான் வேலைசெய்கிறது. இங்கு தியாகத்திற்கும் மதிப்பு கிடையாது.

மக்களுக்கு இடையூறாக இடங்களில் வைக்கக்கூடாது.. கட்சிகளுக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும் அதிகாரிகள் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நீங்கள் பதாகைகள் வைக்க வேண்டுமென்றால், சிக்கல்கள் வராது. இனிவரும் காலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஆளும் கட்சியினர் போதையிலேயே வாழ்ந்து விட்டார்கள். இரண்டு கட்சிகள்தான் இந்த பேனர் கலாச்சாரத்தை ஆரம்பித்தது எங்களைப் போன்றவர்கள் எல்லாம் அனுமதி கேட்கவேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் அனுமதி கேட்டு கொண்டு வைக்கின்றோம் அவர்கள் கேட்பதில்லை எங்கு வேண்டுமானாலும் வைப்பார்கள்.

விஜய் அரசியல் பேசுகிறார் என்ற கேள்விக்கு, அரசியல் பேசுவது என்பது எல்லோருடைய உரிமை அவர் கண்முன் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு குரலெழுப்பிப் பேசுவது என்பதை நாங்கள் வரவேற்கிறோம் என சீமான் கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...