62 புதிய பேருந்துகள் பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி

கோவை : உக்கடம்‌, தொண்டாமுத்தூர்‌ ஆகிய பகுதிகளில்‌ 62 புதிய பேருந்துகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.


கோவை : உக்கடம்‌, தொண்டாமுத்தூர்‌ ஆகிய பகுதிகளில்‌ 62 புதிய பேருந்துகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.

பின்னர்‌ பேசிய அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின்‌ வழியில்‌ செயல்படும்‌ தமிழ்நாடு அரசு பொது மக்களின்‌ போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில்‌ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்‌ சார்பில்‌ தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும்‌ பேருந்து சேவை வழங்கி வருகிறது. 

மேலும்‌ புதிய பேருந்துகள்‌ மற்றும்‌ வழித்தடங்களை துவக்கி வைத்தல்‌, புதிய பணிமனைகள்‌ அலுவலக கட்டடங்கள்‌, போக்குவரத்து தொழிலாளர்களின்‌ நலன்‌ கருதி தரம்‌ மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள்‌ கட்டுதல்‌, இணையதளத்தின்‌ வாயிலாக முன்பதிவு வசதி போன்ற வசதிகள்‌ செய்யப்பட்டுள்ளது என்றார்.



தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களுக்கு 2018-2019ம்‌ ஆண்டிற்கு 3000 புதிய பேருந்துகள்‌ ரூ.893 கோடி செலவில்‌ வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ உத்தரவிடப்பட்டு, அதில்‌ கோவை போக்குவரத்துக்‌ கழகத்திற்கு 170 பேருந்துகள்‌ சுமார்‌ 50.6 கோடி செலவில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில்‌ முதல்‌ கட்டமாக கோவை மண்டலத்திற்கு 30 புதிய பேருந்துகள்‌ கடந்த (04.07.2019) அன்று முதலமைச்சர்‌ அவர்களால்‌ சென்னையில்‌ துவக்கி வைக்கப்பட்டு புதிய பேருந்துகள்‌ இயக்கப்பட்டு வருகிறது.

இரண்டாவது கட்டமாக கோவை மண்டலத்திற்கு 16 புதிய பேருந்துகள்‌ கடந்த (14.08.2019) அன்று முதலமைச்சர்‌ அவர்களால்‌ சென்னையில்‌ துவக்கி வைக்கப்பட்டு புதிய பேருந்துகள்‌ இயக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து கோவை மண்டலத்திலிருந்து 62 புதிய பேருந்துகள்‌ (22 புறநகர்‌ பேருந்துகள்‌, 40 நகரப்‌ பேருந்துகள்‌) இதில்‌ 14 பேருந்துகள்‌ தொண்டாமுத்தூர்‌ மாரியம்மன்‌ கோவில்‌ திடலிலும்‌, 48 பேருந்துகள்‌ உக்கடம்‌ பேருந்து நிலையத்திலிருந்தும்‌ இன்று(29.09.2019) பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்காகத் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌, மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண்‌ இயக்குநர்‌ அ.அன்பு ஆபிரகாம்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டர்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...