சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பு வரவில்லை எனில் தென் இந்திய அளவில் பக்தர்களை ஒருங்கிணைத்து சபரிமலையில் மாபெரும் போராட்டம் : ராகுல் ஈஸ்வர்

கோவை : ஐயப்பன் கோவில் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவுக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பு வரவில்லை எனில் தென் இந்திய அளவில் பக்தர்களை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் சபரிமலையில் வெடிக்கும் என ஐயப்பன் கோவில் தந்திர குடும்பத்தின் பேரன் ராகுல் ஈஸ்வர் மேட்டுப்பாளையத்தில் தெரிவித்தார்.

கோவை : ஐயப்பன் கோவில் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவுக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பு வரவில்லை எனில் தென் இந்திய அளவில் பக்தர்களை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் சபரிமலையில் வெடிக்கும் என ஐயப்பன் கோவில் தந்திர குடும்பத்தின் பேரன் ராகுல் ஈஸ்வர் மேட்டுப்பாளையத்தில் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காட்டூர் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் குடும்ப விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேரள ஜய்யப்பன் கோவில் சபரிமலை தந்திரி குடும்ப உறுப்பினரான ராகுல் ஈஸ்வர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராகுல் ஈஸ்வர்,  ஐயப்பன் கோவில் விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் தந்திரி சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக்கவும் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், நவம்பர் 16 முதல் ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகள் துவங்க உள்ளதாகவும் அப்போது தீர்ப்பு தங்களுக்கு சாதமாக வரவில்லை என்றால் இதுவரை இல்லாத அளவிற்கு கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான என தென் இந்திய அளவிலான ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் சபரிமலையில் போராட்டம் வெடிக்கும் என்றார்.

மேலும், சபரிமலை விவகாரத்தில் கேரள அரசும் தற்போது ஐயப்ப பக்தர்களின் போராட்டங்களைக் கண்டு இரண்டு மனதாக இருப்பதாகக் கூறிய ராகுல் ஈஸ்வர், உச்சநீதிமன்றம் ஆன்மீக மாண்புகளைக் காக்கும் வகையில் நல்ல தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ஆகிய இருவரும் பக்தர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிய அவர், கேரள அரசும் சபரிமலை விவகாரத்தில் அரசியைத் துறந்து ஆன்மீகத்திற்கு ஆதரவளித்து சபரிமலை மாண்பினை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...