கோவை : கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காகச் சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க கோரி வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர் வீட்டிற்குள் புகுந்து சூளை அதிபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிய பகுதியில் செங்கல் சூளைகளுக்காக மண் எடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு மனுக்களை அதிகாரிகளிடம் அளித்துள்ள போதும் உரிய நடவடிக்கை என்பது இல்லாத நிலையில் செங்கல் சூளைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.
இந்நிலையில், செங்கல் சூளைகள் மண் எடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறித்தி கோவை தடாகம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வருகிற அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், வழக்கை தொடர்ந்த தடாகம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வீட்டில் இருந்த போது நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளை அதிபர்களும் அவர்களது ஆதரவாளர்களும் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். மேலும், அவர்கள் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லை என்றால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், மிரட்டல் தொடர்பாக கணேஷ் காவல்துறையில் புகார் அளிக்க முடியாத நிலையில், சூளை அதிபர்களின் ஆதரவாளர்கள் கார்களில் வழியில் நின்று மிரட்டுவதாக கணேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் பேசிய போது, மிரட்டல்களை கண்டு அஞ்சப்போவதில்லை எனவும் வழக்கு நடத்தப்படுவது உறுதி எனவும் தெரிவித்தார். மேலும் அதிகாரம் அரசிடம் உள்ளதா இல்லை செங்கல் சூளை அதிபர்களிடம் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல் சூளைகளை முறைப்படுத்த வேண்டும், மண் எடுப்பை சீராக்க வேண்டும், அது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலுத்து வரும் நிலையில், வழக்கு தொடர்ந்தவரைச் சூளை அதிபர்கள் கூட்டமாக சென்று மிரட்டிய சம்பவம் பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.