விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனாலும் மாணவர்கள், இளைஞர்கள் மனதில் தரையிறங்கியதே சந்திரயான் 2ன் வெற்றி : மயில்சாமி அண்ணாத்துரை

கோவை : விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனாலும் இளம் விஞ்ஞானிகள், இளைஞர்கள், மாணவர்கள் மனதில் தரையிறங்கியுள்ளதால் இந்தியா அறிவியல் வளர்ச்சி பெற்று வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார்.

கோவை : விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனாலும் இளம் விஞ்ஞானிகள், இளைஞர்கள், மாணவர்கள் மனதில் தரையிறங்கியுள்ளதால் இந்தியா அறிவியல் வளர்ச்சி பெற்று வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் செயல்படும் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி நிர்வாக அறங்காவலர் வெ.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் இரண்டு விண்ணில் ஏவப்பட்டது மூன்று காரணங்களுக்காக, 

ஒன்று சந்திரயான் நிலவில் இருப்பதைத் தண்ணீர் உறுதி செய்தது அதனுடன் அங்குள்ள கனிமவளங்களைக் கண்டறியவும் அதனை உறுதி செய்யவும் அனுப்பப்பட்டது.

இரண்டாவது நிலவில் மெதுவாக விக்ரம் லேண்டரை தரையிறக்கி ஆய்வு செய்வது, மூன்றாவது இளைஞர்களுக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கும் அறிவியலாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் உலக நாடுகளுக்கு இணையாக நாமும் அறிவியலில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்டது.

இதில் ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்திருந்தாலும் இரண்டில் வெற்றி அடைந்திருக்கிறோம் என்பதுடன் அறிவியலில் இளைஞர்களின் கவனம் அதிகரித்திருப்பதைக் காண முடிந்ததாக கூறினார்.

மேலும், கிரிக்கெட்டிற்காக மட்டும் நள்ளிரவு வரை கண்விழித்து பார்த்த இளைஞர்கள் சந்திரயான் இரண்டில் விக்ரம் லேணடர் தரையிறங்குவதைக் காண ஆர்வமாக இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக கூறிய மயில்சாமி அண்ணாத்துரை, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனாலும் மாணவர்கள், இளைஞர்கள் மனதில் தரையிறங்கியது, சந்திரயான் 2வின் வெற்றி என கூறினார்.

மேலும், சந்திரயான் ஆர்பிட்டர் என்பது ஆறு ஆண்டுகளுக்கு நிலவைச் சுற்றி ஆய்வு செய்ய உதவும் எனவும் அதன் மூலம் கூகுள் மேப் போல நிலவின் வரைபடத்தை துல்லியமாக உருவாக்க ஆர்பிட்டர் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் முன்னர் அனுப்பிய சந்திரயானை விட, சந்திரயான் இரண்டு மூலம் நிலவை முப்பரிமாண படம் மூலம் காண முடிவதுடன் அங்குள்ள தண்ணீரின் ஆழம் பனிப்பாறைகள் குறித்த ஆய்வுக்கு அது உதவும் என கூறினார்.

ஏற்கனவே சந்திரயான் முதல் அனுப்பியது போல் இல்லாமல், தற்போது இளம் விஞ்ஞானிகள் அதிகம் நம்மிடம் உள்ளதாகவும் எனவே ஏற்கனவே நமக்கு கிடைத்த சந்திரயான் சமிக்கைகளைக் கொண்டு ஆராய உலகம் முழுவதும் அறிவியலாளர்கள் இணைந்து வருவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுகுணா, செயலாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...