வால்பாறையில் பள்ளிக்கூடத்தின் சத்துணவு கூடத்தை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்

கோவை : வால்பாறையில் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை : வால்பாறையில் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் பல குழுக்களாகத் தேயிலை தோட்டப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இவைகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. வால்பாறையை அடுத்த வறட்டுப்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் 5 காட்டு யானைகள் நுழைந்தன. காட்டு யானைகளின் வருகையை அறிந்த மக்கள் ஒன்று திரண்டு குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகாமல் தீ பந்தம் காட்டி சத்தம் போட்டு விரட்டினர்.



தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய யானைகள் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் சுற்றுச் சுவரை இடித்து உள்ளே நுழைந்து பள்ளியின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. மேலும் சத்துணவு கூடத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை எண்ணை ஆகியவற்றை தின்று நாசப்படுத்தின.

தொடர்ந்து, அதிகாலை வரை முகாமிட்ட யானைகள் காலையில் அங்கிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்திலும் பீதியிலும் தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...