திருப்பூர் : உலக இருதய தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற வாக்கத்தான் போட்டி ஏராளமானோர் பங்கேற்றனர்.

இருதய பாதுகாப்பு, நோயில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும், நடைப்பயிற்சியினால் இருதய நோயை வெல்ல முடியும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூரில் உள்ள தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய வாக்கத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கலியமூர்த்தி ஆகியோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி 2 அரை கிலோ மீட்டர் தூரம் கல்லூரி சாலை வழியாக சென்று வஞ்சி பாளையம் பகுதியில் முடிவடைந்தது.