அக்.3ம் தேதி முதல் குரூப்-2 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் - திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் வரும் அக்.3ம் தேதி முதல் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் வரும் அக்.3ம் தேதி முதல் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியதாவது: "டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குருப்-2 தேர்வுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு வரும் அக்.3ம் தேதி பயிற்சி வகுப்புகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 4வது மாடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெறலாம் என தெரிவித்தார். 

"திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் 3-ம் தேதி காலை 11 மணிக்கு துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில், சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு தயார் செய்ய உதவும் வகையில் 1500 புத்தகங்கள் தன்னார்வ பயிலும் நூலகத்தில் குறிப்புதவிக்கு வைக்கப்பட்டுள்ளன", என தெரிவித்தார். 

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். வகுப்பில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 4-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, ஆகியவற்றுடன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார. 

இப்பயிற்சியின் இறுதியில் மாதிரித் தேர்வுகள், பாடக்குறிப்புகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன என்பதால், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...