கோவை : கோவை கோவில்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட கீரணத்தம் அருகே ஆட்டோ ஓட்டுனரை 2 நபர்கள் சரமாரியாகத் தாக்கி கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த மனோகரனின் மகன் அருண்பிரசாத் (28). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில், அருண் பிரசாத் வழக்கம்போல வாடகைக்குச் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தரப்பினருடன் வாக்குவாதம் எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அருண் பிரசாத் கீரணத்தம் அருகே டீ குடிக்க ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் கையில் கொண்டு வந்திருந்த கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுத்தும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர்.

இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அருண்பிரசாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு நபர்கள் ஆட்டோ ஓட்டுனர் அருண் பிரசாத்தை தாக்கி கொலை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ஆட்டோ ஓட்டுனரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.