கோவையில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் விழா

கோவை : கோவையில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை : கோவையில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை அண்ணாசாலை அருகே மாநகர காவல்துறை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நோக்கில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினர்.

சமீப காலங்களாக கோவை மாநகர காவல்துறையின் முயற்சியால் நூற்றுக்கு 60%பேர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.

இதில் மீதமுள்ளவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நோக்கில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல காவல்துறையின் கெடுபிடியும் அதிகரித்துள்ளது.



இந்த நிலையில், இன்று அண்ணாசாலை அருகே அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாளையொட்டி இலவச ஹெல்மெட் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துறை இயக்குனர் பிலிப் தலைமை தாங்கினார்.



தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...