நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக்கல்வித் துறையின் பணி : அமைச்சர் செங்கோட்டையன்

கோவை : நீட் தேர்விற்குப் பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக்கல்வித் துறையின் பணி எனவும் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த விளக்கமே போதுமானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை : நீட் தேர்விற்குப் பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக்கல்வித் துறையின் பணி எனவும் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த விளக்கமே போதுமானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். 

இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்றும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும், தொலைநோக்கு சிந்தனையுடன் அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக கூறினார்.

மூன்றாவது ஆண்டாக தமிழக அரசு நீட் தேர்வு பயிற்சி அளித்து வருகிறது எனவும் அரசு பள்ளி மாணவர்கள் விடுமுறை நாட்களில் மட்டுமே நீட் பயிற்சி பெறும் நிலை உள்ளதாக தெரிவித்த அவர், இந்தாண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று 49.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, 2 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாகவும் அடுத்தாண்டு 500 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வுக்கு தற்போது பதினொன்றாவது, பன்னிரண்டாவது புத்தகங்களைப் படித்தால் நல்லது எனவும் அதற்கு ஏற்றார் போல புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டது என்றார். நீட் தேர்விற்குப் பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளி கல்வித் துறையின் பணி எனவும் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த விளக்கமே போதுமானது எனவும் அவர் கூறினார். 

ஆன்லைன் மூலம் சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரியை போல மாணவர்களுக்குத் தனியாக பேருந்து இயக்க பரீசிலணை நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். டி.என்.பி.சி.தேர்வில் தமிழ் மொழி நீக்கம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார் எனவும் தேர்வாணயம் என்பது தேர்தல் ஆணையம் போல தனியாக ஒரு அங்கீகாரம் உள்ள ஒரு ஆணையம் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் முதல் பள்ளிகளில் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதையடுத்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளைகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி செயல்படுவது அரசின் கவனத்திற்கு வந்திருப்பதாகவும் அச்செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். மேலும், செங்கல் சூளைகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்று வருகின்றனர் எனவும் அவர் கூறினார். 75 அடி வரை செம்மண் எடுக்க அனுமதி வழங்கியிருப்பதாகவும் அப்பகுதிகளில் செம்மண் காலங்காலமாக எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...