தி.மு.கவின் தனி நாடு கோரிக்கை அப்போதைய மத்திய அரசின் கைது நடவடிக்கைக்கு பயந்தே கைவிடப்பட்டது : பொன்.ராதாகிருஷ்ணன்

கோவை : தி.மு.கவின் தனி நாடு கோரிக்கை அப்போதைய மத்திய அரசின் கைது நடவடிக்கைக்கு பயந்தே கைவிடப்பட்டது எனவும் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு சட்ட பிரிவை அப்போதைய ஆட்சியாளர்கள் தவறாக பயன்படுத்தியதால் நேருவாலேயே 42பிரிவுகள் நீக்கப்பட்டதைக் காங்கிரஸ் மறந்து விட கூடாது என மேட்டுப்பாளையத்தில் முன்னாள் மத்திய இனை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை : தி.மு.கவின் தனி நாடு கோரிக்கை அப்போதைய மத்திய அரசின் கைது நடவடிக்கைக்கு பயந்தே கைவிடப்பட்டது எனவும் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு சட்ட பிரிவை அப்போதைய ஆட்சியாளர்கள் தவறாக பயன்படுத்தியதால் நேருவாலேயே 42பிரிவுகள் நீக்கப்பட்டதைக் காங்கிரஸ் மறந்து விட கூடாது என மேட்டுப்பாளையத்தில் முன்னாள் மத்திய இனை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முறையில் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவினை நீக்கியது குறித்து மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இனை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கியதின் மூலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எதிர்கால காஷ்மீரின் வளர்ச்சி குறித்து விளக்கி பேசினார். 



நிகழ்ச்சியில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், யாருடைய சிபாரிசில் காஷ்மீரில் ஆட்சியில் ஷேக் அப்துல்லா ஆட்சிக்கு வந்தாரோ அவராலயே இறக்கப்பட்டது அவரின் மோசமான நடவடிக்கைக்காக, ஜவஹல்லால் நேருவால் ஆட்சிக்கு தகுதி இல்லாதவர் என காஷ்மீர் அரசில் இருந்து அகற்றப்பட்டு கைது செய்யப்பட்டவர் ஷேக் அப்துல்லா என பேசினார், காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட 370 சட்ட பிரிவை அகற்றியது குறித்து எதிர்ப்பு தெரிவித்து அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தம் மேற்கொள்ள கூடாது என கூறிவரும் தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கும் விளக்கம் அளித்த அவர், காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவின் மோசமான நடவடிக்கையால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சி, சிறப்பு சட்டத்தில் இருந்த 42 பிரிவுகளை காங்கிரஸ் ஆட்சியிலேயே ஜவஹல்லால் நேருவால் அகற்றப்பட்டது என கூறினார். 

மேலும், 1963 வரை தனிநாடு கோரிக்கை வலியுறுத்தி வந்த தி.மு.க ஷேக்அப்துல்லா கைது செய்யப்பட்டதைக் கண்டு அஞ்சி அதன் பின்னர் தனது தனிநாடு கோரிக்கையை கைவிட்டது என்பது வரலாறு, அதனை மறந்து இன்று தி.மு.க பேசி வருவதாக வருவதாக கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 72 ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இருந்த காஷ்மீர் பிரச்சனையை 72 மணி நேரத்தில் நிறைவேற்றி உலக நாடுகளையே ஆச்சரியப்படுத்தியவர் பிரதமர் மோடி என்றும் ஆகஸ்ட் 5 2019 க்கும் முன்பு வரை உலக நாடுகள் பார்வை இந்தியாவின் மீது வேறாக இருந்தது ஆனால் இன்று உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு மாற்றி அமைத்துள்ளார் என பேசினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...