குடிசை மாற்று வாரியத்தில்‌ வீடு வாங்கித்தருவதாக ரூ. 24 லட்சம் மோசடி ; தந்தை, மகன் கைது

கோவை : கோவையில் குடிசை மாற்று வாரியத்தில்‌ வீடு வாங்கித்தருவதாக ரூ. 24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை : கோவையில் குடிசை மாற்று வாரியத்தில்‌ வீடு வாங்கித்தருவதாக ரூ. 24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். 

கோவை பீளமேடு வி கே ரோரு பொரிக்கடை சந்தில்‌ வசிப்பவர்‌ அய்யாசாமி மகன்‌ சக்திவேல்‌. இவர்‌ சொந்தமாக ஆட்டோ வைத்து பீளமேடு பகுதியில்‌ ஒட்டி பிழைத்து வருகிறார்‌. இவரது நண்பர்‌ ஈஸ்வரன்‌ என்பவருக்கு தெரிந்த செல்வபுரம்‌ ஹவுசிங்‌ யூனிட்டில்‌ வசிக்கும்‌ கிருஷ்ணனும்‌ அவரது மகன்‌ சரவணக்குமாரும்‌, சக்திவேலையும்‌ ஈஸ்வரனையும்‌ கடந்த 2018ம்‌ ஆண்டு ஜூலை மாதம்‌ அணுகி தமிழக அரசால்‌ கட்டிக்‌ கொடுக்கும்‌ குடிசை மாற்று வாரியத்தில்‌ வீடு வாங்கித்தருவதாகவும்‌ அதற்கு பணம்‌ ரூபாய்‌ 1,36,000 கொடுக்கும்படி கூறியுள்ளார். 

மேலும், தாங்கள்‌ ஏற்கனவே இதேபோல்‌ 23 நபர்களிடம்‌ பணம்‌ பெற்றுள்ளதாகவும்‌ குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில்‌ தங்களுக்குத் தெரிந்த அதிகாரிகள்‌ இருப்பதாகவும்‌ விரைவில்‌ வீடு பெற்றுத்தருவதாக நம்பிக்கையுடன்‌ கூறியதால், சக்திவேல்‌ அதை நம்பி மூன்று தவணைகளில்‌ பணம்‌ கொடுத்ததாகவும்‌ கிருஷ்ணனும்‌ அவரது மகன்‌ சரவணக்குமாரும்‌ சொன்னபடி வீடு வாங்கித்தராததால்‌ சக்திவேல்‌ கோவை மாநகர குற்றப்பிரிவில்‌ புகார்‌ அளித்ததின்‌ பேரில்‌ கோவை மாநகர குற்றப்பிரிவில்‌ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ சுமித்‌ சரண் அவர்களின்‌ உத்தரவுப்படி, காவல்‌ துணை ஆணையர்‌ பெருமாள் அவரது மேற்பார்வையில்‌, உதவி ஆணையர்‌ சவுந்திரராஜன்‌ தலைமையில்‌, காவல்‌ ஆய்வாளர்‌ மல்லிகா, உதவி ஆய்வாளர்‌ ஜமுனா மற்றும்‌ போலீசார், அரசு கட்டித்தரும்‌ குடிசைமாற்று வீடு வாங்கித்‌ தருவதாக 24 நபர்களிடம்‌ ரூபாய்‌ 24 லட்சம்‌ பணம்‌ வாங்கி ஏமாற்றிய கிருஷ்ணனையும்‌ அவரது மகன்‌ சரவணக்குமாரும்‌ நேற்று கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைத்தனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...