நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், இன்று 300 இளம் ராணுவ வீரர்களின் சத்திய பிரமாணம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைப் பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்படுவர். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் போர் பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரியும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி நடந்தது. பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பயிற்சி வீரர்களின் கம்பீரமான அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, பயிற்சியின் போது சிறந்து விளங்கிய ராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

பயிற்சியை முடித்த ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.