கோவை : கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது தோனிமுடி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவர் தேயிலைத்தோட்ட குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இவரின் வீட்டு முன்பக்க கதவு சுவரை உடைத்து உள்ளே புக முயற்சி செய்தன.

கதவு உடைப்படும் சத்தம் கேட்டு எழுந்த மாணிக்கம் யானை கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பின்பக்க கதவு வழியாக குடும்பத்துடன் ஓடி உயிர் பிழைத்தார்.
வீட்டின் முன்பக்க அறையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி நாசம் செய்த அந்த யானை கூட்டம், மேலும் பக்கத்தில் உள்ள கவிதா என்பவரின் வீட்டையும் சேதப்படுத்தின. இதனிடையே தேயிலை தோட்ட காவலர்கள் டிராக்டர் மூலம் காட்டு யானைகளை விரட்டினர்.
தொடர்ந்து காட்டு யானைகள் அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் இன்று இரவு மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் உள்ளனர்.
இன்று காலை முதல் வனத்துறையினர் அந்த யானைக கூட்டத்தின் நடமாட்டத்தை கண்கானித்து வருகின்றனர்.