கோவை : கோவை மத்திய சிறையில் கடந்த புதன்கிழமையன்று 7 செல்போன்கள் சிறை நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது லேப்டாப், மெமரி கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மத்திய சிறைச்சாலையானது தமிழக அளவில் உயர்பாதுகாப்பு மிக்க சிறைச்சாகைகளில் ஒன்றாக உள்ளது. அதே போல இந்த சிறைச்சாலையில் ஆண்களுக்கு , பெண்களுக்கு என்று தனித்தனி சிறைகள் உள்ளது.
இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள், வெடிகுண்டு வழக்கில் கைதான கைதிகள், மாவோயிஸ்ட்கள், உள்ளிட்ட 1800 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
உயர்பாதுகாப்புப்புடைய இந்த சிறைச்சாலையில் சட்டவிரோதமாக செல்போன் கஞ்சா உள்ளிட்டவை கைதிகளுக்கு வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
இதனால் சிறை நிர்வாகத்தினர் திடீரென அவ்வப்பொது சோதனைகள் மேற்கொள்கின்றனர். இப்படி நடைபெறும் சோதனைகளில் பலமுறை செல்போன் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இப்படி சிறைக்குள் கைதிகளுக்கு கஞ்சா போன்ற பொருட்களை கொண்டு செல்லும் சில வாடன்கள் மற்றும் காவலர்கள் மீதும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் கஞ்சா கொண்டுவர உதவியதாக கிருஷ்ணமூர்த்தி என்ற வாடன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை சிறை நிர்வாகத்தால் கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் சிறையில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் 4 லேப்டாப், 31 ஆண்ட்ராய்டு போன், 16 மெமரி கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல சிறையிலிருந்து புலனாய்வுத் துறையின் விசாரணையில் இருப்பவர்களுடன் போனில் பேசியதாக எழுந்த புகாரையடுத்து இந்த திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இது குறித்து எந்த வித அதிகாரப் பூர்வமான தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை.