சமீபத்திய கன மழையில் பாதிக்கபட்ட அவலாஞ்சி மின்நிலைய ஊழியர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் - தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி

நீலகிரி : சென்ற மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கொட்டித் தீர்த்த கன மழையில் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி மின்நிலைய ஊழியர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என அவலாஞ்சி மழை சேதங்களை ஆய்வு செய்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீலகிரி : சென்ற மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கொட்டித் தீர்த்த கன மழையில் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி மின்நிலைய ஊழியர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என அவலாஞ்சி மழை சேதங்களை ஆய்வு செய்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் அவலாஞ்சி பகுதியில் பணிபுரிந்து வரும் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கித் தவித்தனர். அதில், காட்டுகுப்பை பகுதியை சேர்ந்த மின்நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். 



இந்த நிலையில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி இன்று அவலாஞ்சி மின் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். 



மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக மின்துறையில் உள்ள 5 ஆயிரம் காலி பணி இடங்கள் விரைவில் நிரப்பபடும் என உறுதியளித்தார். 

மேலும், கன மழையால் பாதிக்கபட்ட அவலாஞ்சி மின் வாரிய ஊழியர்களுக்கு குடியிருப்புகள் ஆம்புலென்ஸ் வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என தெரிவித்த அவர், நீலகிரி மாவட்டம் ஜில்லா ஹல்லா பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட்டில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும், ஆனால் வனத்துறை அனுமதி இன்னும் கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்தார். 



பின்னர், காட்டுகுப்பை மின் உற்பத்தி மையத்திற்கு சென்று ஆய்வு நடத்திய பின், மின் ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பாராட்டினார். நிறைவாக புதிதாக நடைபெற்று வரும் மின் உற்பத்தி சுரங்க பாதை பணியையும் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...