அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள் கொண்டு வர நடவடிக்கை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கோவை : சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை : சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 168 பெண்கள் உள்பட 550 வனக்காப்பாளர்கள் 45 ஓட்டுனர்கள் ஆகியோருக்கு கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

6 மாதமாக நடைபெற்ற பயிற்சியில் தீ தடுப்பு, மனித விலங்குகள் மோதல் தடுப்பு,நீர் மேலாண்மை, கவாத்து, யோகா, வாகனம் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மேலும் வனக்காப்பாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் வன ஆராய்ச்சி நிலையங்கள்,வன தோட்டங்கள்,சதுப்புநில காடுகள் என வனப்பகுதிகளில் 15 நாட்கள் தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் 550 பேர் கலந்து கொண்டனர்.



இந்நிலையில், பயிற்சி முடித்த 550 வனக்காப்பாளர்களுக்கும் 45 ஓட்டுநர்களுக்கும் இன்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா கோவை தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு வனக்காப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற வனக்காப்பாளர்கள் செய்த சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், முதல்வருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயிற்சி நிறைவு செய்த வனகாப்பாளர்கள் மத்தியில் பேசுகையில், வனத்துறையைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகின்றது என தெரிவித்தார். மாநிலத்தின் வனப்பரப்பு 33 விழுக்காடு எட்டிடும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என கூறிய அவர், தற்போது தமிழகத்தில் வனப்பரப்பளவு 20.21 விழுக்காடு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.



மேலும், 2021ல் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என இலக்காக கொண்டு இந்த அரசு செயல்படுவதாகத் தெரிவித்த அவர், வனத்துறை பணியில் ஈடுபட இருக்கும் வனக்காப்பாளர்களுக்கு வனம் சார்ந்த பல்வேறு பணிகள் காத்திருக்கின்றது என்றும் அதற்குத் தயாராக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார். மேலும் சென்னையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...