மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்ட குறும்பட போட்டிகள் ; மாணவர்கள் அசத்தல்

கோவை : மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்ட குறும்பட போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் பரிசளிப்பு விழா சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

கோவை : மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்ட குறும்பட போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் பரிசளிப்பு விழா சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

பாரத பிரதமர் மோடி அவர்களின் நலத்திட்டங்கள் வாயிலாக மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற மையக் கருத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டது. இந்த குறும்படங்கள் இரண்டு நிமிடம் முதல் அதிகபட்சமாக ஐந்து நிமிடங்கள் வரை எடுக்கப்பட்டு இருந்தது.

இந்த குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில் :







மத்திய அரசு இந்தி மொழி திணிப்பதாக இல்லை இதனை அரசியல் கட்சிகள் தான் அரசியலாக்குவதாகவும் மற்றொரு மொழி தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றார். அனைவரும் இந்தி கற்றுக்கொண்டால் நாமும் கற்க வேண்டிய நிலை வந்து விடுமோ என இந்தி திணிப்பு எனச் சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் நினைக்கிறார்கள் போல எனவும் பொது மொழி ஒன்று இருப்பது அவசியம் என்றார்.

மேலும், ஒரு மொழி இருப்பதால், இன்னொரு மொழி அழியும் என்ற பொய்யாக பிரசாரம் ஒரு கும்பலால் தவறாக இங்கு பரப்பப்படுகின்றது என்றும் இந்தி மொழி கற்றுக் கொள்ளாத காரணமாக 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை எனவும் அதற்கு மொழியும் ஒரு காரணம் என்றார். பிரதமர் மோடியின் பேச்சுகளை மொழி மாற்றம் செய்யத் தான் விரும்புவதாகவும் அதற்கான உரிமத்தை வாங்க முயற்சிப்பதாக கூறினார்.

இயக்குனர் கஸ்தூரி ராஜா, பேசுகையில் :







இந்தியா என்பது தேசம், இந்தியன் என்பது பெயர், இந்து என்பது என் அடையாளம், இந்தியா என்பது என் நிரந்தர விலாசம் என தனது பேச்சைத் துவங்கியவர், பிரதமர் மோடி மக்கள் பயனடையும் வகையில் நாட்டிற்கு நல்ல பல செயல்படுத்தும் திட்டங்களைச் செயலாற்றி வருவதாகவும், திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த் போல் நடிகர்களுக்கு அளிக்கப்படும் உற்சாக வரவேற்பு, பிரதமர் மோடிக்கு அளிக்கப்படுவதாகவும் வெளிநாட்டில் நம் பிரதமருக்கு சிறப்புக்கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டு, நம் தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் காணும் போது சிலிர்படைய செய்வதாக கூறினார். தலைவனாக இருக்க ஒரு தகுதி வேண்டும் அது நமது பிரதமர் மோடியிடம் மட்டுமே உள்ளது என்றார். இந்தியாவை அசைக்க முடியாத நிலைக்கு உலக நாடுகளுக்கு முன் முதல் பெயராக இந்தியாவை கொண்டு சென்றுள்ளார் என்றார்.

சுதந்திரம் கிடைக்கப் பெற்ற இத்தனை ஆண்டுகள் நாடு சுரண்டப்பட்ட நிலையில், தற்போது தான் விடியல் வந்துள்ளது எனவும் இந்தியா காப்பாற்றப்பட்டு விட்டது தமிழகம் தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றார். மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றவர், பருவ வயதில் செயல்படுத்துவதன் மூலமே சீர்திருத்தங்கள் ஏற்படும் எனவும் மாணவர்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

இந்த குறும்பட போட்டியில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும்,எஸ்.என்.எஸ் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. 



முதல் பரிசாக ரூ.50,000 கோப்பை மற்றும் சான்றிதழ், இரண்டாம் பரிசாக ரூ.25,000 கோப்பை மற்றும் சான்றிதழ், மூன்றாம் பரிசாக ரூ.10,000 கோப்பை மற்றும் சான்றிதழ்களை பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கினர்.

குறும்பட சிறப்புப் பரிசை பேரூர் தமிழ் கல்லூரியும், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், நடிகையர் தேர்வு, ஒளிப்பதிவாளருக்கான விருது, பட தொகுப்பாளர் விருது என ஒரு லட்சத்து முப்பது மூன்றாயிரம் மதிப்பிலான விருதுகள் வழங்கப்பட்டன. 



இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி நிர்வாக இயக்குனர் மணிமேகலை மோகன் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...