மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில்பாதையில் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் ரத்து ; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோவை : மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் பாறை விழுந்ததால் நடுக்காட்டில் மலை ரயில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மலை ரயில் ரத்து செய்யபட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.


கோவை : மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் பாறை விழுந்ததால் நடுக்காட்டில் மலை ரயில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மலை ரயில் ரத்து செய்யபட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மலை ரயில், தினசரி மேட்டுப்பாளையத்தில் இருந்து உதைக்கு இயக்கப்பட்டு வருகிறது. நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த ரயில் பயணித்து அடர்ந்த வனத்தின் நடுவே உள்ள இயற்கை அழகினை ரசிக்க இந்தியா மற்றும் இன்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 200 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் குன்னூர் புறப்பட்டுச் சென்றது. ரயில் கல்லாரினை தாண்டி ஹில்கிரோ ரயில் நிலையம் அருகே சென்ற போது மலை ரயில் பாதையில் பாறை உருண்டு விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்தது. இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனையடுத்து தண்டவாளம் சேதமானது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.



பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சேதமடைந்த தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியினை மேற்கொண்டனர். இருப்பினும் ராட்சத பாறையைத் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த இரண்டு மணி நேரமாக போராடியும் முடியாததால் பயணிகள் நடுக்காட்டில் சிக்கித் தவித்தனர். பின்னர், சீரமைப்பு பணி நிறைவடையாததால் ரயில் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது..



கல்லார் ரயில் நிலையம் வரை பயணிகளுடன் வந்த மலை ரயிலில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இறக்கி விடப்பட்டு அரசு பேருந்துகள் மூலம் உதைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...