கோவை : உத்தமவில்லன் படப்பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனவும், அப்பிரச்சனை வெளியே வந்ததே துர்திஷ்டம் எனவும் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை :உத்தமவில்லன் படப்பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனவும், அப்பிரச்சனை வெளியே வந்ததே துர்திஷ்டம் எனவும் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, கல்லூரி மாணவர்களுக்காக குறும்பட போட்டி மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற குறும்படங்களுக்கான பரிசளிப்பு விழா சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்தி ஒரு மொழி எனவும் ஆங்கிலம் போல இந்தியும் கற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருப்பது நல்லது எனவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் அரசியல் காரணமாக இந்தி எதிர்க்கப்படுகிறது எனவும், அரசியல்வாதிகளுக்குப் பயன்படுவதால் தான் இந்தி எதிர்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

உத்தமவில்லன் படப்பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி கொண்டிருக்கிறார்கள் எனவும், அப்பிரச்சனை வெளியே வந்ததே துர்திஷ்டம் எனவும் அவர் தெரிவித்தார்.

