சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளின் பாரம்பரிய உடையணிந்து மாணவர்கள் பேரணி

கோவை : சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவையில் மாணவ மாணவிகள் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்ட பேரணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை : சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவையில் மாணவ மாணவிகள் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்ட பேரணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



பயணம் அலாதியானது. அதுவும் மொழி, இனம், நாடு கடந்து சுற்றுலா செல்வதெல்லாம் எல்லோருக்கும் வாய்க்கப்பெறாத அதிசய உணர்வு. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவையில் டிராவல்ஸ் அசோசியன் சங்கத்தினர் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் சமையற்கலை துறை சார்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி, கோவையில் நடைபெற்றது. கோவை காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே துவங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



சர்வதேச சுற்றுலா தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். 



பேரணியில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழர்கள், பஞ்சாபி, உள்ளிட்ட மக்களின் பாரம்பரிய உடைகளுடன் எகிப்து, மங்கோலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பாரம்பரிய உடைகள் அணிந்தும் கலந்து கொண்டது அவ்வழியே சென்ற பார்வையாளர்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...